திருவெண்ணைநல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருவெண்ணைநல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X
திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்திருந்த போது பெரியசெவலை கூட்ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்தனர்,

அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்து, அப்பகுதியில் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி, அவுலியா நகரை சேர்ந்த ஜான் பாட்ஷா , முகமது இம்ரான் கான் , ரவணபாக்கத்தை சேர்ந்த மாயவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்,

அவர்களிடமிருந்து ரூபாய் 25,000/- பணம் மற்றும் இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்,

Tags

Next Story
why is ai important to the future