கொரானா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்

கொரானா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்
X

அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர் 

திருக்கோவிலூர் அருகே அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி என்பவர் மகன் ஹரிதாஸ், மணலூபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சாருமதி இருவருக்கும் கோயில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழக அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிதிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கி அமைச்சரிடம் ஆசி பெற்றனர், நிதியை பெற்று கொண்ட அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!