விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல்

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல்
X

விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி 

திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் ஊராட்சியை சேர்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பாவந்தூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ஆமூர்குப்பம் பகுதியில் திடீர் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், சட்ட மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர்.இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயசந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையின் முதல்வர் மரு.குந்தவைதேவி மற்றும் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!