அரக்கண்டநல்லூரில் பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

அரக்கண்டநல்லூரில் பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்
X

பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி.

The Bridge News- விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் மேம்பாலத்தை அமைச்சர் பொன்முடி என்று திறந்து வைத்தார்.

The Bridge News- விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ரூ.1.10 கோடி மதிப்பிலான புதிய உயர்மட்ட மேம்பாலத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்டபாலம் திறப்புவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை வகித்தார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி முன்னிலை வகித்தார். பாலத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து பேசும்போது, விழுப்புரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் சாலையில் அரகண்டநல்லூரில் பழையபாலம் பழுதடைந்த நிலையில் இருந்தது.

2020இல் ஏற்பட்ட வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டவெள்ளநீர் தேவனூர் ஓடையில் உள்ள இந்தசிறுபாலம் வழியாக சென்றதால் வெள்ளநீர் முழுவதும் அரகண்டநல்லூர் கிராமத்தை சூழ்ந்தது. அதன்படி, வெள்ளநிரந்தரசீரமைப்புபணி 2020-2021 திட்டத்தின்கீழ் ரூ.1.10 கோடியில் உயர்மட்டபாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் மூலம் இனிவரும் காலங்களில் வெள்ள நீரில் மக்கள் சிக்காமல் பாலத்தை கடக்க முடியும். விவசாயிகள் தாங்கள் விளைவித்தபொருட்களை எளிதில் எடுத்துச் சென்று சந்தைப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்களுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ளபயனுள்ளதாக இப்புதிய பாலம் அமையும் என்றார் அமைச்சர் பொன்முடி.

இந்நிகழ்ச்சியில், மாவட்டஊராட்சிகுழுத்தலைவர் ம.ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறைகோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவிப் பொறியாளர் வசந்தபிரியா, அரகண்டநல்லூர் பேரூராட்சிதலைவர் அன்பு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story