திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி

திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி
X

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்ட காட்சி 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலுாரில் தி. மு. க., இளைஞரணி சார்பில், மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு கவுதம சிகாமணி எம். பி., பரிசு வழங்கி பாராட்டினார்.

போட்டியில், தமிழகத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்க்ரிஷ் பிரசாத் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் உடல்தகுதி தேர்வில் முதலிடம் பிடித்தார். இதேபோல் பல்வேறு பிரிவுகளின்கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாலை பரிசு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு, இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர்கள் ராயல்அன்பு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!