அரகண்டநல்லூர் போலீஸார் மெத்தனம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளக்கு முன்பு (01.01.2018) உள்ளாட்சி மன்ற தேர்தலில் முன்விரோத காரணமாக சென்னை சார்ந்த கூலிப்படையினர் 6 பேர் கிருபாநிதி, வீரமணி, கோபிநாத் ஆகிய இளைஞர்கள் மீது திட்டமிட்டு கொலை மற்றும் கொலைவெறி தாக்குதல் நடந்தேறியது.
இந்த சம்பவத்தில் கூலிப்படை குண்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாக அப்போது தமிழக அரசு மற்றும் காவல் துறையினரால் திசை திருப்பப்பட்டது. இந்தச் சம்பவத்தை கண்டித்தும், உண்மை குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை சம்மந்தப்பட்ட சென்னை ரவுடிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உரிய தண்டனையும் வழங்கப்படவில்லை,
இதன் தொடர்ச்சியாக தற்போது வசந்தகிருஷ்ணாபுரத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறு சம்பவத்தில் செல்வராஜ் குடும்பத்தினர் மற்றும் சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் 8 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கண்டாச்சிபுரம் சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் கடந்த 15.12.2022 அன்று அரங்கேற்றி உள்ளனர்.
இதனால் வசந்தகிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் அமைதியின்றி அச்சம் அடைந்து உள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் கூலிப்படை குண்டர்கள் பயன்படுத்திய கார் அரகண்டநல்லூர் காவல் நிலையம் கொண்டு சென்று காவல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து கார் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அந்த சென்னை கும்பலிடமே காவல்துறை ஒப்படைத்து உள்ளனர்.
கார் பறிமுதல் செய்யப்பட்வில்லை. சென்னை ரவுடிகள் மீது 306- சட்டப் பிரிவின் படி வழக்குபதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை, மேலும் ஒப்புக்கு செல்வராஜ் குடும்பத்தினர் 4 பேர் மீது 506 (2)-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, அரகண்டநல்லூர் காவல் நிலையத்தின் இத்தகைய செயலை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு நீதி விசாரணை செய்து பாதிக்கப்பட்டு உள்ள வசந்தகிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் தொடர்ந்து சில அண்டுகளாக சென்னையை சேர்ந்த கூலிப்படை குண்டர்களால் திட்டமிட்ட கொலை மற்றும் கொலைவெறி தாக்குதல் நடத்தும் ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த கும்பல் மீது 307-இன் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதோடு, அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ய வேண்டும்.
சென்னையை சேர்ந்த கூலிப்பிடை குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தும் உள்ளூர் ஆதிக்கசக்திக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், வேல்மாறன், வட்ட செயலாளர் கணபதி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu