15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்ற வரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை பக்கத்து தெருவை சேர்ந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர்.

இது குறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திச்சென்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!