இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு கட்சியினர்

இருவேல்பட்டு கிராம ஏரிக்கரையில் பனை விதை நட்ட இந்திய குடியரசு கட்சியினர்
X

இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் இந்திய குடியரசு கட்சியினர் பனை விதை நட்டனர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் இந்திய குடியரசு கட்சியினர் பனை விதை நட்டனர்.

இந்திய குடியரசு கட்சி தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான செ.கு.தமிழரசன் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராம ஏரி கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் இருவேல்பட்டு அ.குமார் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் வா.பிரபு,மாநில இணை பொது செயலாளர் க.மங்காபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு 1001 பனை விதைகளை நடுவு செய்தனர், நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர். பாலவீரவேல்,ஒன்றிய தலைவர் ஆர்மி தியாகராஜன்,முன்னாள் ஒன்றிய தலைவர். ராஜேந்திரன்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project