மனைவி மகளைக் காணவில்லை என கணவர் புகார்: காவல்துறை விசாரணை

மனைவி மகளைக் காணவில்லை என கணவர் புகார்: காவல்துறை விசாரணை
X
திருவெண்ணைநல்லூர் அருகே வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனைவி மகளை காணவில்லை என கணவர் புகார் செய்தார்

மனைவி மகளை காணவில்லை என கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி,திருவெண்ணைநல்லூர் அருகே சாராயமேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மனைவி பிச்சையம்மாள் ( 47). அவரது மகள் அன்னபூரணி( 22). இவருக்கு செல்வகணபதி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அன்னபூரணி தனது தாய் பிச்சையம்மாளுடன் திருவெண்ணைநல்லூர் அருகே ஆலங்குப்பம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி ஆகிய இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மனைவி மற்றும் மகளைத்தேடி அவர்கள் வேலை பார்க்கும் ஆலங்குப்பம் சூப்பர் மார்க்கெட் சென்று குமார் விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். வேறு எங்கு சென்றனர் என்று தெரியாது எனக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமார், தனது மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். இது குறித்து குமார், திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து, தாயும் மகளும் எங்கு சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!