அரகண்டநல்லூர் அருகே குட்கா விற்பனை செய்தவர் கைது

அரகண்டநல்லூர் அருகே குட்கா விற்பனை செய்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட ரமேஷ்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதி, கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின்படி, டிஎஸ்பி பார்த்திபன், தனிப்படை ஆய்வாளர் சித்ரா மற்றும் காவலர்கள் ஆலம்பாடி கிராம மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு உள்ள பெருமாள் மகன் ரமேஷ் 50 வயது உடையவரின் கடையில் சோதனை செய்த போது அங்கு 1600 பாக்கெட் ஆன்ஸ் மற்றும் விமல் போதை பாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரது கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி