திருவெண்ணைநல்லூர் அருகே ஆடுகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பைல் படம்
Villupuram Today News - விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55) ஆடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் வெள்ளாடு செம்மறியாடு உட்பட மொத்தம் 32 ஆடுகளை தனது வீட்டின் பின்புறம் ஆட்டுக் கொட்டகை அமைத்து மேய்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைகளில் அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடுகள் சிலவற்றை திருடி சென்றனர்.
இன்று காலை சுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் ஆட்டுக்கொட்டைக்கு சென்று பார்த்தபோது கோட்டையில் இருந்த ஆடுகளில் 15 ஆடுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இன்று புதன் கிழமை உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுப்பிரமணியன் அவரது மகனுடன் உறவினர்களும் சேர்ந்து காலையிலே உளுந்தூர்பேட்டையில் நடக்கும் ஆட்டுச் சந்தைக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு சுப்பிரமணியனின் ஆடுகள் எதுவும் இல்லை.
இது குறித்து சுப்பி ரமணியன் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று ஆனத்தூர் அருகே உள்ள பகுதியில் ஒரு மூதாட்டி வீட்டில் ஆட்டுக்கொட்டகையில் இருந்து ஆடுகளையெல்லாம் கார் மூலம் ஆடு திருடும் கும்பல் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆடு திருடும் கும்பலால் ஏழை மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு ஆடு திருடும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஏழை விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu