கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ

கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
X

தீப்பற்றி எரியும் வட்டாட்சியர் வாகனம்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீ பற்றி எரிந்தது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மதியம் திடீரென வட்டாட்சியர் கார் தீ பிடித்து எரிந்தது. அதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

உடனடியாக விரைந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!