விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்

விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்
X

வெள்ளையனே வெளியேறு தின ஆர்ப்பாட்டம்

அரகண்டநல்லூரில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் வெள்ளையனே வெளியேறு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் வெள்ளையனே வெளியேறு நாளை முன்னிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு ஆகியன இணைந்து கோரிக்கை முழக்கத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, கட்சி வட்ட செயலாளர் எஸ்.கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future