திருவெண்ணெய் நல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

திருவெண்ணெய் நல்லூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
X
Lightning Strike Victims - திருவெண்ணெய் நல்லூர் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Lightning Strike Victims -திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியம் சீக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). விவசாயி. இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (45) என்பவருடன் திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு டி.கொளத்தூர் வழியாக மொபட்டில் ஊருக்கு புறப்பட்டனர்.

பூசாரிபாளையம் முனியப்பர் கோவில் அருகே சென்றபோது இடி. மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பழனிவேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!