விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
X
விழுப்புரம் மாவட்டம்கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே திருவண்ணாமலை- சென்னை செல்லும் சாலையில் அடுக்கம் வன அலுவலர் அலுவலகம் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கார் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே கார் டிரைவர் வேட்டவலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இது குறித்து கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்ககாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai marketing future