திருவெண்ணெய்நல்லூரில் திமுக கனவு நிறைவேறியது

திருவெண்ணெய்நல்லூரில் திமுக கனவு நிறைவேறியது
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை கைப்பற்றுவதில் திமுகவின் 50 ஆண்டு கனவு நிறைவேறியது.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4168 பேரும், பெண் வாக்காளர்கள் 4279 பேரும் என மொத்தம் 8447 வாக்காளர்கள் உள்ளனர்.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., வி.சி.க., அ.ம.மு.க. வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 55 பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 6 ஆயிரத்து 916 பேர் வாக்களித்தனர். 9 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களும், 6 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக கடந்த 1968-ம் ஆண்டு தரம் உயர்ந்த பிறகு 12 முறை தேர்தல் நடந்துள்ளது. ஒரு முறை கூட தி.மு.க. பேரூராட்சியை கைப்பற்றியதில்லை.

கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் தி.மு.க. வென்று திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை கைப்பற்றி 54 ஆண்டுகால கனவை தி.மு.க. நினைவாக்கி கொண்டது, இதனால் அப்பகுதி திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story