முகையூர் ஒன்றிய தலைவராக திமுகவின் தனலட்சுமி தேர்வு

முகையூர் ஒன்றிய தலைவராக திமுகவின் தனலட்சுமி தேர்வு
X

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றிய தலைவராக, தனலட்சுமி உமேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியத்தின் தலைவராக, திமுகவின் தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், முகையூர் ஒன்றிய தலைவருக்கான தேர்வு, ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுகவை சேர்ந்த தனலட்சுமி, தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Tags

Next Story
the future of ai in healthcare