தொண்டர்களை வைத்து திமுக அராஜகம் செய்கிறது : சசிகலா குற்றச்சாட்டு
சசிகலா விழுப்புரம் மாவட்டத்தில் கல் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார்
திமுகவினர் பிரச்சாரத்தில் தொண்டர்களை வைத்து அராஜகம் செய்கின்றனர் என சசிகலா குற்றம்சாட்டினார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5- ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் திருவெண்ணைநல்லூர் கடைவீதி , பெரியசெவலை, அரசூர் கூட்ரோடு ஆகிய இடங்களில் சசிகலா வேனில் அதிமுக கொடியுடன் மக்களை சந்தித்து பேசியதாவது: மறைந்த எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோர் மரியாதையாகவும் கண்ணியத்துடன் கட்சித் தொண்டர்களிடம் நடந்துகொண்டனர். அதேபோல் ஆட்சியும் கழகத்தையும் சிறப்பாக நடத்தினார்கள். சிலரால் கட்சிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக இருக்க முடியவில்லை .திமுகவினர் தொண்டர்களை வைத்து அராஜகம் செய்கின்றனர்.
திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த அம்மா சிமெண்ட் திட்டத்தை முடக்கம் செய்து ஏழை எளிய மக்கள் வீடு கட்ட முடியாத அளவிற்கு செய்து விட்டனர். லாக்கப் டெத், போதைப் பொருட்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை என தமிழகத்தில் அதிகமாக நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் மட்டும் வேலை நடைபெறுவதாகவும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை எனவும் பெண்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.
இதையெல்லாம் மக்களுக்கு திமுக அரசு செய்து கொடுக்க வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நவீன மயமாக்கப்பட்ட மருத்துவமனை கால்நடை மருத்துவமனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இடவசதி டி. எடப்பாளையத்தில் துணை காவல் நிலையம், திருவெண்ணெய்நல்லூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம், இருளர்களுக்கு சாதி சான்றிதழ் , அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும், ஆனத்தூர் பகுதியில் கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தொழிற்சாலை மற்றும் குளிரூட்டும் மையம் அமைத்து தரவேண்டும் இந்த கோரிக்கைகளை தற்போதைய அரசு செய்து தரவில்லை என்றால் விரைவில் நமது அரசு வந்தவுடன் செய்து தரப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu