திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X
மழைநீர் வடிகால் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட கலெக்டர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மழைநீர் தேங்கி நின்றதை பார்வையிட்ட அவர், மழைநீரை வடிய செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும். அடுத்து பருவ மழைக்காலம் வரவுள்ளதால் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் கழிவுநீரோ, மழைநீரோ தேங்காத வண்ணம் கண்டறிந்து வெளியேற்றுவதுடன் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபெய்க், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!