கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

கண்டாச்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஓகே முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சு.வேல்மாறன், வட்ட பொருளாளர் எம்.ராமலிங்கம், வட்டகுழு உறுப்பினர்கள்.கே.சுப்பிரமணி, கே.தனஞ்செழியன், பி.தெய்வேந்திரன், சி.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டகுழு உறுப்பினர் பி.முருகன் வட்ட செயலாளர் எஸ் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தமிழக அரசு உடனடியாக கண்டாச்சிபுரம், வீரபாண்டி, அரகண்டநல்லூர் பகுதியிலும், தற்போது அறிவிக்கப்பட்ட ஆயந்தூர் பகுதியில் நடப்பு பருவத்துக்கு நேரடி கொள்முதல் நிலையங்களை மீண்டும் உடனே துவங்கிட வேண்டும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!