விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள்,இளம் பெண்கள், குழந்தைகள், மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர், இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து சிறுமிகள் கடத்தல் என்ற புகார்களும் வழக்குப்பதிவு, கைது, விசாரணை என நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,
மேலும் இது போன்ற பல சம்பவங்கள் வெளியே வராமலும் குடும்ப கவுரவம் பஞ்சாயத்து என்ற முறையில் மறைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்,
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரகண்டநல்லூர் காவல் நிலைய சரகத்தில் சிறுமிகள் கடத்தல் என புகார்களும், அதையொட்டி காவல்துறை 2/06/2021 சம்பவத்தில் குற்ற எண்:- 367/2021ல் சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்s/o ஆராதுரை என்கின்ற ராஜேந்திரன் (வயது 23 ) என்பவர் 16 வயது சிறுமியை இரவு வீட்டில் இருந்தபோது கடத்தி சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சிறுமி மீட்கப்பட்டுள்ளார்
06/06/2021- குற்ற எண் :-369/2021ல் பரனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்s/o சுப்பிரமணி என்பவர் 16 வயது சிறுமியை திருமணத்திற்கு பெண் கேட்டு கொடுக்கவில்லை என்ற காரணத்தால் சிறுமியை மேற்படி வெங்கடேஷ் தன் குடும்பத்தை சேர்ந்த லட்சுமி w/o சுப்பிரமணி, விஜிs/o சுப்பிரமணி, வேலு s/o சுப்பிரமணி, சிலம்பு s/oசுப்பிரமணி, சத்தியப்பன்s/o சிலம்பன், சுந்தரிw/o சாத்தியப்பன் ஆகிய ஏழு பேரும் கடத்திச் சென்றுவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர், சிறுமி மீட்கப்பட்டுள்ளார்,
09/06/2021 பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நபர்கள் சிறுமியை கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சிறுமியையும் குற்றவாளிகளையும் பிடித்த அரகண்டநல்லூர் காவல் நிர்வாகம், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டதில் வந்த பதில்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன,
9/06/2021இன்று தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதாக வந்த புகாரின் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர் காவல்துறையினர்
கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் அரகண்டநல்லூர் காவல் எல்லையில்
1,ஆலம்பாடி 1
2,தணிக்கலாம்பட்டு 1
3, குடமுருட்டி1
4, சித்தாமூர்1
5, கடகால் 1
6, கீழக்கொண்டூர்
என 6 கிராமங்களில் 6 சிறுமிகள் கடத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஒரு சிலர் மட்டும்தான் சட்டத்தின் பார்வைக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, பெரும்பாலானவர்கள் குடும்ப கவுரவம் என்ற முறையிலும் ஊர் பஞ்சாயத்து என்ற முறையில் மறைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் முக்கியமானவை. சிறுமிகள் பெண்களை பாதுகாத்திட இப்பகுதியில் அரசு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்பகுதி பொதுமக்கள் பெண்கள், சிறுமிகள் உரிமைக்கான சட்டநடவடிக்கை பெறவேண்டும், இப்பகுதியில் இருந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட தலை நகர் விழுப்புரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதுவே பெண்கள் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதில் பெரும் சுமையாக உள்ளன, ஆகவே இப்பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானூர், காணை, செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகள், விருப்பம் இல்லாத பெண் குழந்தைகள் கடத்தி சென்று திருமணத்திற்கு கட்டாய படுத்துவது, கூட்டு பாலியல் வன்கொடுமைகள் என தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது, அதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், சில இடங்களில், ஆதிக்க சக்திகளின் தலையீட்டால் பஞ்சாயத்துகளில் முடிந்து பாதிக்கப்பட்டவர்கள் பரிதவிக்கும் நிலை தான் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளி மற்றும் கிராா புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu