மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

கண்டாச்சிபுரத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டகுழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் வி.உதயகுமார் மாவட்டகுழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் கலந்துகொண்டு பட்ஜெட்டை கண்டித்து பேசினர்.

வட்டகுழு உறுப்பினர்கள் எம்.பார்வதி, பி.முருகன், ஏ.வி.கண்ணன், டி.ராமமூர்த்தி, என்.எஸ்.ராஜா, ஏ.ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story