விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
X

திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில், இன்று (05.07.2022) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறையின் மூலம், தேவனூர் ஓடை தரைப்பாலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார்.

இதில் அவர் பேசுகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம், வெள்ள மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில், தேவனூர் ஓடைப்பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இன்னும் ஒருவார காலத்தில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் செயல்பாட்டிற்கு துவங்க உள்ளன என தெரிவித்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவி செயற்பொறியாளர் தனராஜ், உதவி பொறியாளர் வசந்தபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!