நூறு நாள் வேலையில் பண்ணை குட்டை: ஆட்சியர் ஆய்வு

நூறு நாள் வேலையில் பண்ணை குட்டை: ஆட்சியர் ஆய்வு
X

பண்ணை குட்டை அமைப்பதை பார்வையிட்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில் நூறுநாள் வேலையில் பண்ணை குட்டை அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சி ஒன்றியம்,க.பில்ராம்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் (நூறு நாள் வேலை) பண்ணை குட்டை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் த.மோகன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!