அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்: 4 குழந்தைகள் காயம்

அங்கன்வாடி மைய கட்டடம் சேதம்:  4 குழந்தைகள் காயம்
X
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அங்கன்வாடி மைய சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெநல்லூர் வி.கே.எஸ். நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரை பெயர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மீது விழுந்தது. இதில் அப்ரின் (வயது 3), ரித்திகா (3) முனிஸ்ரீ, சகானாஸ்ரீ ஆகிய 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களது பெற்றோரிடம் ஆறுதல் கூறினர்.

இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அங்கன்வாடி கட்டடத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture