விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது

விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பாவாடை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மளிகை கடை கல்லாவில் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துன்பம்பரமேடு கிராமம் ஓடுவன்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் பாவாடை. இவர் அங்குள்ள மளிகை கடையில் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், அப்போது கடை உரிமையாளர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது கடையின் கல்லாவைத் திறந்து ரூபாய் 5 ஆயிரத்தை திருடி உள்ளார்.

அப்போது பொதுமக்கள் பார்த்து கண்டாச்சிபுரம் ஆய்வாளர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் சித்ரா, பாவாடை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!