திண்டிவனத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் நடத்தும் வாலிபர் சங்கத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டிவனம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் தோழர் பார்திபன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.எம்..சத்தீஷ்குமார், சிஐடியு மண்டல தலைவர் இராமதாஸ், ஏஎல்ஐயு சங்க நிர்வாகி கோவிந்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் சச்சின், விக்னேஷ், ஜெ.சதிஷ், தமிழ்செல்வன், ராஜீ அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!