திண்டிவனம்: கலக்கத்தில் திமுக மகிழ்ச்சியில் அதிமுக
திண்டிவனத்தில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அதிருப்தி நிலவுவதால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பலர் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களம் காண தயாராகி வருகின்றனர்.
திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தி.மு.க., நகர செயலாளர் கபிலன் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன் சாலை மறியல் உள்ளிட்ட எதிர்ப்பு திமுகவில் நடந்தேறியது, இதனையடுத்து நகர செயலாளர் கபிலன் அமைச்சர் மஸ்தானை நேரில் சந்தித்து, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த சூழ்நிலையில் நேற்று வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், கபிலன் ஆதரவாளரான நகர அவைத்தலைவர் செல்வராஜ் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.இந்நிலையில், சீட் கேட்டு மறுக்கப்பட்ட கபிலன் ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே தங்கள் வார்டுகளில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ள நிலையில், தற்போது சீட் இல்லையென்று உறுதியானதைத் தொடர்ந்து, கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் திமுகவினர் மத்தியில் கலக்கமும், அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியும் அப்பகுதியில் நிலவுகிறது, அந்த அதிமுக மகிழ்ச்சி நீடிக்குமா என்பது வரும் 4 ந்தேதி மனு தாக்கல் முடிவுக்கு பின்னர் தெரியும் என்கிறது திண்டிவனம் நிலவரம். திண்டிவனம் நகராட்சி இரு அமைச்சர்களின் ஈகோவால் திமுக கோட்டை விட்டு விடுமோ என அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu