/* */

கழுவேலி அணையை விரைந்து முடிக்க விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே கழுவேலி ஏரியில் கட்டப்பட்டு அணையை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

கழுவேலி அணையை விரைந்து முடிக்க  விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
X

விழுப்புரம் மாவடட்ம், திண்டிவனம் தொகுதிக்குள்பட்ட மரக்காணம் ஒன்றியத்தில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் கழுவேலி ஏரி புனரமைப்பு விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி,மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கந்தாடு கிராமத்தில் கடல் நீர் உட்புகாதவாறு தடுக்க ரூ.161 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழுவேலி ஏரி கடைமடை அணையை மாவட்ட ஆட்சியர் த.மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத் தினை மேம்படுத்திடும் வகையில் தூண்டில் வளைவு மீன்பிடி தடை காலங்களில் நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கந்தாடு கிராமத்தில் கடல் நீர் உட்புகாதவாறு தடுக்க ரூ.161 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கடைமடை அணையை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரக்காணம் வட்டம் கிழக்கு கடற்கறை பகுதியில் கழுவேலி ஏரி அமைந்துள்ளது. இதன் அகலம் 10.50 கி.மீ. நீளம் 12.80 கீ.மீ சுமார் 70 சதுர கி.மீ நீர்பரப்பு உள்ள இந்த ஏரி 8 கி.மீ நீள முக துவாரத்தின் மூலம் எடையன்திட்டு கழுவேலியில் இணைகிறது. இந்த கழுவேலியானது 10 கி.மீ நீளத்திற்கு விரிந்து பின் மரக்காணத்தின் வடக்கே கடலுடன் சேர்கிறது. கழுவேலி ஏரியை மீட்டெடுத்து தண்ணீரை தேக்குதல், கடல்நீர் உட்புகுதலை தடுத்தல் மற்றும் கடல்நிரை உள்விடாமல் நன்னீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்து மழைக்காலங்களில் வெள்ளநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துதல், ஏரியில் கொள்ளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கழுவேலி ஏரியை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட 29 கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்படும் மற்றும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், கழுவேலி ஏரியை சுற்றியுள்ள 51 நீர் பிடிப்புப் பகுதிகள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். மேலும், இத்திட்டத்தின் மூலம் வண்டிப்பாளைம் கிராமத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடையவுள்ளதால் இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்., பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் வெ.ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 8 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்