வீடூர் அணை தரமற்ற தார் சாலை அமைப்பதற்காக புகார்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
வீடூர் அணையில், தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுர் அணையின் கரைப்பகுதியில் 4.5 கிலோ மீட்டர் அளவிற்கு தார்சாலைகள் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிற நிலையில், புதியதாக தார்சாலை அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழைய தார்சாலை மீது கவனம் குறைவாகவும், தரமற்ற சாலை அமைப்பதாக கூறி ஆத்திகுப்பம் பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போடப்பட்ட தார்சாலையை கைகளால் பெயர்த்து எடுத்து, தரமற்ற சாலை அமைப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த அணையின் பொறியாளர் மற்றும் பணி ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் தரமான முறையில் சாலை அமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதியினர் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். ஆனாலும், இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது ரூ.43 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ரூ.55 லட்சம் மதிப்பில் அணையின் கரையில் 4.5 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அத்திக்குப்பத்தை சேர்ந்த சிலர் வீடூர் அணைக்கு வந்தனர். அப்போது தார் சாலை தரமற்றதாக போடப்பட்டதாக வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இ்ந்த குற்றச்சாட்டு குறித்து வீடூர் அணையின் உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) ரமேஷ் கூறுகையில் பணி ஆணையின்படி 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 செ.மீட்டர் உயரத்தில் 3¾ அடி அகலத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலை இறுகும் தன்மை அடையும் முன்பே சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலையை பெயர்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அணையின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் கிராமப்புற சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டதால் கடந்த வடகிழக்கு பருவமழையால் பல்வேறு சாலைகள் கார்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி வருவதாக மாவட்ட மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இந்நிலையில் இந்த அணையில் போடப்படும் 55 லட்சம் மதிப்பிலான தார் சாலையின் நிலை தற்போது தரமற்ற பணி என்பது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu