விழுப்புரம் மாவட்டத்தில் மூதாட்டிக்கு 3 முறை தடுப்பூசி

விழுப்புரம் மாவட்டத்தில் மூதாட்டிக்கு 3 முறை தடுப்பூசி
X

3-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட  மூதாட்டி.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒரு மூதாட்டிக்கு 3 வது முறையாக தடுப்பூசி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள விட்டலாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (48). விவசாயி. அவரது தாய் கண்ணம்மா (70) என்பவர் அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தடுப்பூசி முகாமை, இலவச மருத்துவ முகாம் என நினைத்து கொரோனா தடுப்பூசி முகாமுக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரிடம் எந்த விபரத்தையும் கேட்காமல் அவருக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஊசி போட்டவர்களிடம் சென்று அவரது மகன் கேட்டபோது திண்டிவனத்துக்கு சென்று டாக்டரிடம் கேட்கும்படி கூறினர்.

அதனால் அவர் அவரது தாயை கூட்டிக்கொண்டு திண்டிவனம் பகுதியில் நடந்த முகாம் நடந்த இடத்திற்கு வந்தார், அப்போது அங்கு ஆய்வு வந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. அதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story