திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X
கைது செய்யப்பட்ட இருவருடன் போலீசார்.
திண்டிவனம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதிகளில் ரோசனை காவல் ஆய்வாளர் பிருந்தா, வெளிமேடு பேட்டை உதவி ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது போலீசாரை கண்டதும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர்.

உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களின் பாக்கெட்டில் இருந்து தங்க நகை கீழே விழுந்தது.பின்னர் போலீசார் அவர்கள் வந்த வாகனத்தையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திருட்டு வாகனம் என தெரியவந்தது.

மேலும் அவர்களை போலீசார் வெளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

அதில் இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள குருமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 26) லோகநாதன் (20) என்பது தெரிய வந்தது.

மேலும் தீவிர விசாரணையில் இவர்கள் திண்டிவனம் மற்றும் திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் காலையில் வீட்டின் முன் கோலம் போடும் பெண்களையும் குறி வைத்து நகை பணம் உள்ளிட்ட வழிபறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை, ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் இந்த 2 பேர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!