திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
X

 விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் கைதான ஆசாமிகளுடன், அவர்களை மடக்கிப் பிடித்த வனத்துறையினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூத்துறை கிராமம், புதுவை மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதிகள் அதிகம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடும்பு, ஆமை ஆகியவை இரவு நேரங்களில் உலா வருகிறது. இந்த ஆமை களை அந்த பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் வேட்டையாடி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் நடமாடுவதாக திண்டிவனம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி திரிந்தனர். உடனே வனத்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் 19 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைங்க்த வனத்துறையினர் அதனை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் வில்லியனூரை சேர்ந்த முத்து (வயது 21), புதுவை மாநிலம் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (21) என்பது தெரிய வந்தது.

உடனடியாக, 2 பேரையும் ஆராவில் காவல் நிலையத்துக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் எதற்காக வெடிகுண்டுகள் கொண்டு வந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர்? 2 பேரும் கூலி படையினரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!