திண்டிவனத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 5 பேர் கைது
திமிங்கிலத்தின் உமிழ்நீர்(ஆம்பர்)
திண்டிவனம் முருங்கப்பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கிலத்தின் உமிழ்நீர்(ஆம்பர்) பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திண்டிவனம் ஏடிஎஸ்பி அபிஷேக்குப்தாவின் தனி படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்ஐ ஆனந்தராசன், சிறப்பு எஸ்ஐ அருள்தாஸ், ஏட்டுகள் வெற்றிவேல், கணேசன், காவலர் யுவராஜ் மற்றும் போலீசார் முருங்கப்பாக்கம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் வசிக்கும் மோகனரங்கன் என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 24 கோடி மதிப்பிலான 16.150 கிலோ வாசனை திரவிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான மற்றும் உயர் ரக மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் திமிங்கல உமிழ்நீர் பொருட்களை கைப்பற்றியதுடன் மோகனரங்கத்தை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய மயிலம் அடுத்த ஆலகிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாகத்தை சேர்ந்த சந்திரசேகர், செய்யூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்த முருகன், செய்யூர் அடுத்த தேன்பாக்கத்தை சேர்ந்த லட்சுமிபதி ஆகியோரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது மோகனரங்கன் காவல் நிலையத்திலிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu