திண்டிவனத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

திண்டிவனத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
X

பைல் படம்.

Fire Accident - செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பெண் திண்டிவனத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

Fire Accident -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவரது மனைவி மீனாட்சி (28). கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் கோபித்துக் கொண்டு மீனாட்சி திண்டிவனம் ஏகாம்பரம் பிள்ளை தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மீனாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!