திண்டிவனத்தில் பாமக கொடியேற்றத்தில் திருட்டு

திண்டிவனத்தில் பாமக கொடியேற்றத்தில் திருட்டு
X

பாமக கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ்.

PMK Party - திண்டிவனம் நகராட்சி பகுதியில் பாமக சார்பில் கொடியேற்றம் நடந்த நிகழ்ச்சியில் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு நடைபெற்றது.

PMK Party - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர பா.ம.க., சார்பில் கடந்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரியாஸ் ஓட்டல் அருகில் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பா.ம.க., நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதால் கொடியேற்றிவிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

அதன் பிறகு அன்புமணி ராமதாஸ், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை காணவில்லை. தொடர்ச்சியாக வழக்கறிஞர் பாலாஜி என்பவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500ம், நடுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க., நிர்வாகி பாலுவிடம் 3 பவுன் நகையையும் காணவில்லை. கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் நகை, பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, கட்சியினர் மத்தியில் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!