அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்ட வேன் பறிமுதல்

அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்ட  வேன்  பறிமுதல்
X
அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதகிருஷ்ணன் ஆகியோர் திங்கட்கிழமை திண்டிவனம் தொகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, நேரு வீதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட டிஎன்.10.ஏடி.9005 பதிவெண் கொண்ட மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், தொகுதி தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதமின்றி பிரசாரம் மேற்கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, மினி வேனை பறிமுதல் செய்து, திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தார். பின்னர், ரோஷணை பகுதியில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டனர்,தொடர்ந்து, திண்டிவனம் தொகுதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, தேர்தல் பொது பார்வையாளர் முகமது கைசர் அப்துல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதகிருஷ்ணன், தொகுதி தேர்தல் அலுவலரான சப் கலெக்டர் அனு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி