சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
ஆண்டு விழாவில் பரிசு பெற்ற மாணவர்கள்.
Saraswati College Of Engineering -திண்டிவனம் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் கல்வி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை பொறியியல் கல்லுாரி முதல்வர் இளஞ்செழியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னதாக துணை முதல்வர் பரமகுரு அனைவரையும் வரவேற்றார். டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாக அதிகாரி பூபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu