வெறும் கையில் துப்புரவு பணி: திண்டிவனத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
திண்டிவனத்தில் நடைபெற்ற நகரமன்ற கூட்டம்
திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜனார்த்தனன், தூய்மை பணியாளர்கள் வெறும் கையோடு சாக்கடையை சுத்தம் செய்யும் புகைப்படத்தை காண்பித்து, அவர்களுக்கு கையுறை உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேலும் வலியுறுத்தினார்.
மேலும் பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் பாதியில் நிற்பதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர். அதற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையர் தட்சிணாமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu