விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்: தொழிலாளர்கள் பாதிப்பு
X

மரக்காணம் அருகே உள்ள உப்பளம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உப்பலங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மரக்காணம் அருகே உப்பளங்களில் உற்பத்தி உப்பு தேக்கத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது.அதனால் உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடற்கரை பகுதிகளில் உள்ள வேலை இன்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!