திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
X

திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் மழை

திண்டிவனத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஆங்காங்கே பரவலாக மழைபெய்து வருகிறது.

இன்று திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மயிலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர், தீவனூர், ஒலக்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரம் வெயில் தாக்கத்தால் வேதனையில் இருந்த விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!