/* */

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் புது பெண் படுகாயம்

Road Accident News - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் புதுப்பெண் படுகாயம் அடைந்தார்.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் புது பெண் படுகாயம்
X

பைல் படம்.

Road Accident News -சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் கேசவ் (வயது 23). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா (19) என்பவருக்கும் திங்கட்கிழமை அம்பத்தூரில் திருமணம் நடந்தது. இதையடுத்து மாலையில் புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு புறப்பட்டனர்.

காரை விழுப்புரம் பொன் அண்ணhமலை நகரை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஓட்டி வந்தார், கார் திண்டிவனம் நத்தமேடு பைபாஸ் அருகில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இந்த விபத்தில் புதுப்பெண் வெண்ணிலா மற்றும் உறவினர் நாராயணன், மீனா ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மணமகன் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் புது பெண் படுகாயம் அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?