விழுப்புரம் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு
X

இலங்கை தமிழர்களுக்கு அடுக்குமாடி வீடு வழங்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

Minister Advice on providing flats for Sri Lankan Tamils

புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அடுக்குமாடி வீடு வழங்குவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், (18.06.2022) அன்று சனிக்கிழமை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையேற்று, இலங்கைத் தமிழர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மக்களுக்கும் அனைத்து அரசு திட்டங்களும் சென்றடைய வேண்டும் எனவும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு, அடிப்படை வசதிகள், கல்வி முதலியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் சனிக்கிழமை கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 435 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு வீடுகள் கட்டித்தரும் வகையில் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான இலங்கைத் தமிழர் மக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. மேலும், இலங்கைத் தமிழர்களின் கருத்துகள் மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுரையின் அடிப்படையில் இப்பகுதியில் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தருவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்,மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers