100 நாள் வேலையில் மாடுகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி

100 நாள் வேலையில் மாடுகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி
X

பசுந்தீவன உற்பத்தி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலையில் மாடுகளுக்கு பசும் தீவனம் உற்பத்தி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஓலக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ள நடந்து வரும் பணியை மாவட்ட கலெக்டர் திரு.த.மோகன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மனோகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!