திண்டிவனம் பகுதியில் பயிர் சேதங்களை முதன்மை செயலர் ஆய்வு

திண்டிவனம் பகுதியில் பயிர் சேதங்களை முதன்மை செயலர் ஆய்வு
X
திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை முதன்மை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட அகூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலர்,தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, ஆணையர் ஹர் சகாய் மீனா இன்று (29.11.2021) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!