சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகனுக்கு தூக்கு

சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகனுக்கு தூக்கு
X
திண்டிவனத்தில் சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த வழக்கில், மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் 2019ஆம் ஆண்டு சொத்துக்காக தனது பெற்றோர், தம்பியை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துள்ளார். இதில் கோவர்த்தனனின் தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஏ.சி வெடித்ததன் காரணமாக இவர்கள் உயிரிழந்துவிட்டதாக கோவர்த்தனன் நாடகமாடியுள்ளார். இந்த வழக்கில் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கின் தீர்ப்பை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (அக்.26) வழங்கியது.வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி இருவருக்கும் தூக்குத் தண்டனையுடன், இரட்டை ஆயுள் தண்டனையும், தலா மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!