திண்டிவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

Crime News in Tamil | River Sand
X
Crime News in Tamil- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓடையிலிருந்து மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Crime News in Tamil-விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம் மற்றும் அதனைச சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அங்குள்ள ஏரி மற்றும் குளங்களில் மண் மற்றும் மணல் திருடப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் திண்டிவனம் அடுத்த மேல் பக்கத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது அந்த பகுதியில் உள்ள ஓடையில் வாகனம் ஒன்றில் மணல் திருடப்படுவது தெரிய வந்தது.

போலீசார் அவர்களை நெருங்கும்போது, அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர்.அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ரோசனை காவல் நிலையம் எடுத்து வந்து வாகனத்தின் பதிவு எண் கொண்டு விசாரணை செய்தனர்

விசாரணையில் அந்த வாகனம் திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான வாகனம் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!