கர்நாடகாவில் இருந்து திண்டிவனத்தில் குட்கா கடத்தியவர்கள் கைது

கர்நாடகாவில் இருந்து திண்டிவனத்தில் குட்கா கடத்தியவர்கள் கைது
X

கர்நாடகாவிலிருந்து திண்டிவனத்திற்கு குட்கா கடத்தி வந்த வாலிபர்கள்

கர்நாடகாவில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு குட்கா கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோசனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமை காவலர் வெற்றிவேல், காவலர்கள் அறிவுமணி, தர்மா ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர். அந்த காரில் 40 மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த 3 பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் தப்பி ஓடினர்.

காவல்துறையினரும் அவர்களை பின் தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்தனர். காவல்துறையினரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறு ஏதேனும் சண்டையோ என வேடிக்கை பார்த்தனர்.

அவர்களைப் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூரை சேர்ந்த கிஷோர்,(வயது 29),சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ், ,செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரானராம்,என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம்,செஞ்சி,பகுதிகளில் குட்காவை கடத்தி செல்வதும் தெரிந்தது.

திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்


மேலும் 3 பேரையும் கைது செய்த காவல்துரையினர், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்..குட்கா கொள்ளையர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!