அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி மனு

அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி  மனு
X

மகளுடன் மூதாட்டி பாப்பம்மாள்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி, சொத்தை மீட்டுத்தரக்கோரி, ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிடங்கல் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மனைவி பாப்பம்மாள். 96வயதான இவருக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 செண்ட் நிலத்தை, கடந்த 2008 ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அடமானம் எனக்கூறி, ஏமாற்றி கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.

மோசடி செய்து நிலத்த அபகரித்த அந்த நபர் மீதுநடவடிக்கை எடுத்து, தனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம், பாப்பம்மாள் தரப்பில் நேரில் வந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவருடன் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்