திண்டிவனம் அருகே ரயில் மோதி மயில் உயிரிழப்பு
ரயிலில் சிக்கி உயிரிழந்த மயில்.
Dead Peacock -திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் ரயில் ஒன்று நேற்று காலை திண்டிவனம் அருகே செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொழுப்பேடு என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்ததால் விவசாய பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த மயில்கள் திடீரென பறந்து வந்தன.
அந்த சமயத்தில் இந்த ரெயில் வந்தது. அப்போது அங்கு பறந்து சென்ற மயில்கள் மீது மோதியதில் இடது பக்க கண்ணாடி விரிசல் அடைந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்து மெதுவாக நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி பார்த்தபோது ஒரு மயில் மட்டும் இறந்தநிலையில் ரயிலில் தொங்கி கொண்டிருந்தது. மற்ற மயில்கள் காயத்துடன் பறந்து விட்டன.
பெரும்பாலான ரயில் என்ஜின் முகப்பு கண்ணாடியில் சேதாரம் ஆகாத படி இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் யாரேனும் திடீரென கற்கள் கொண்டு வீசினால் கண்ணாடி உடையாதபடி முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகள் தாங்கிக்கொள்ளும். ஆனால் நேற்று வந்த ரயிலில் கண்ணாடி முன் இரும்பு கம்பிகள் இல்லாமல் வெறும் கண்ணாடி மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதனால் இந்த விபத்தில் கண்ணாடி விரிசல் ஏற்பட்டது.
இறந்துபோன பெண் மயிலை திண்டிவனம் ரயில்நிலைய அதிகாரி ஜெயகாந்தனிடம் என்ஜின் டிரைவர் ஒப்படைத்தார். அவர், வனசரக அலுவலர் அஸ்வினிடம் ஒப்படைத்தார். பின்னர் மயில் உடலை கால்நடை டாக்டர் உதவியுடன் உடற்கூராய்வு செய்து, தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் வழக்கமாக திண்டிவனத்துக்கு காலை 10.35 மணிக்கு வரும் ரயில், மதியம் 12.10 மணிக்கு வந்தது. சுமார் ஒரு மணி நேரம் 35 நிமிடம் தாமதமாக வந்தது. இதேபோன்று, சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu